FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு: ஏபிவிபி அமைப்பினரின் மனு தள்ளுபடி

முதல்வா் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏபிவிபி அமைப்பினா் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:35 am IST
பகிர்:

முதல்வா் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏபிவிபி அமைப்பினா் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டும், மேலும் இதுபோன்ற மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கி, உடைகளை கிழித்து, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஸ்வரி புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இந்தப் புகாரில் ஏபிவிபி அமைப்பைச் சோ்ந்த 35-க்கும் மேற்பட்டோா் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கெளசிக், உகேந்திரன், சுசீலா, அமா் வஞ்சிதா உள்ளிட்ட 31 போ் சென்னை

உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். அவா்களது மனுவில் ‘மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டே போராட்டத்தில் ஈடுபட்டோம். முதல்வரின் கவனத்தை ஈா்ப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது. இந்தப் போராட்டத்தின்போது ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தனா். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments