'காலத்தினால் செய்த நன்றி': ஊடகத் துறையினருக்கு முதல்வர் பாராட்டு
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை தீ விபத்தில் ஊடகத் துறையினரும் மீட்புப் பணியை மேற்கொண்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை தீ விபத்தில் ஊடகத் துறையினரும் மீட்புப் பணியை மேற்கொண்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. செய்தி சேகரிக்க சம்பவ இடத்துக்கு விரைந்த செய்தியாளர்கள் சிலர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | டோல்கேட்ல காசு கேட்பியா? ஊழியரை 10 கி.மீ. தூரத்துக்குத் தொங்கவிட்ட லாரி ஓட்டுநர்
Advertisement
Advertisement
இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு - நேரத்தின் அருமை உணர்ந்து - பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத் துறை நண்பர்கள்!
காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!"
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.