15 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள் மகா கும்பாபிஷேகம்
தென்னக அயோத்தி என்று போற்றப்படும் புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள், சீதா லக்ஷ்மி ராமர் ஆலய மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
தென்னக அயோத்தி என்று போற்றப்படும் புத்தகரம் லக்ஷ்மி நாராயண பெருமாள், சீதா லக்ஷ்மி ராமர் ஆலய மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா புத்தகரம் கிராமத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் சீதா லக்ஷ்மண அனுமத் ராமர் ஆலயம் அமைந்துள்ளது.
இதையும் படிக்க: பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருகிறேன்: பிரதமர்
Advertisement
Advertisement
கடந்த 2007 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று பூமி பூஜை, வாஸ்து பூஜையுடன் காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலை பிரவேசம், கும்பலங்காரம், மண்டலங்காரம், பிம்பலங்காரம் ஆகியவற்றுடன் யாகசாலை முதல் கால யாகபூஜைகள் தொடங்கியது, 2ம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது.
அதனையடுத்து, விமான கலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.