FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மயிலாடுதுறையில் தலைகீழாக நின்று போராட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு மாவட்ட வளர்ச்சிக்குழு மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜூலை 2022, 9:54 am IST
மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று போராட்டம் நடைபெற்றது.
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு மாவட்ட வளர்ச்சிக்குழு மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் தலைமை வகித்தார். ரயில் பயணிகள் சங்க பொறுப்பாளர்கள் எஸ்.மகாலிங்கம், சாமி.கணேசன், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், 10 ஆண்டுகளாக இணைக்கப்படாத திருவாரூர் அகல ரயில் பாதையை மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் அனைத்து வழித்தடத்தோடும் இணைத்திட வேண்டும், மயிலாடுதுறை - திருச்சி விரைவு வண்டியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும், மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர் வண்டியை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கும் முடிவை கைவிட்டு திருநெல்வேலி வரை இயக்க வேண்டும், மயிலாடுதுறை - பெங்களூர் பாசஞ்சர் வண்டியை மீண்டும் உடனே இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

Advertisement

Advertisement

இந்த போராட்டத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் தலைகீழாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில், மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் இரா.முரளிதரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
படம்: மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments