ஷின்சோ மறைவு: தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து
ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவரது கழுத்து மற்றும் தோள்பட்டை எலும்புப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.
அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே, மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அபேவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், அவர் உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க- சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் ரகுபதி
இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தேசியக் கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.