முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உத்தரவு

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 20 ஜூலை 2022, 2:48 pm IST
பகிர்:

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து ஜூன் 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியே முறையிடப்பட்டது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பை வாசித்த நீதிபதி, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டார்.

மேலும், அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸிடன் ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்திற்குள் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.