FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் புதிய பெட்ரோல் விலை என்ன?

​பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் குறைக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 8.22 குறைந்துள்ளது.

Updated On : 22 மே 2022, 8:41 am IST
கோப்புப்படம்
பகிர்:


பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் குறைக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 8.22 குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விலையும் உயர்ந்தன. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 8 மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 6 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.

இதன்மூலம், பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 8.22 குறைந்து ரூ. 102.63-க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 6.70 விலை குறைந்து ரூ. 94.24-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

எனினும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 100-க்கு கீழ் குறைய வேண்டும் என்பதே இன்னும் மக்களின் விருப்பமாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments