ரேஷன் கடைகளில் கைரேகைக்குப் பதிலாக கருவிழிப் பதிவா? - அமைச்சர் சக்கரபாணி பேட்டி
நியாய விலைக் கடைகளில் கைரேகைப் பதிவுக்கு பதிலாக கருவிழிப் பதிவு அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மாநில உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.
மதுரை: நியாய விலைக் கடைகளில் கைரேகைப் பதிவுக்கு பதிலாக கருவிழிப் பதிவு அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மாநில உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நியாய விலைக் கடைகளில் 100 சதவிகிதம் கண் கருவிழி அடையாள முறை மூலமாக பொருள்கள் வாங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் ‘பயோ-மெட்ரிக்’ முறை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கருவிழி அடையாள முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். மக்களுக்கு அது பயன் அளிக்கும் வகையில் இருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
Advertisement
Advertisement
மேலும், வயல் வெளியில் வேலை பார்ப்பதால் சிலரது கைரேகைகள் பதிவாகுவதில்லை. இதனால் அவர்கள் பொருள்கள் வாங்குவதில் சிரமமாக இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.