சீன பயணிகளுக்கு கரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும். விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதையும் படிக்க- பஞ்சாபில் ரயில் விபத்தில் 3 குழந்தைகள் பலி
Advertisement
Advertisement
அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் அவலங்கள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதல்ல. நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவார் என காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
சீனாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கூட்டம் கூட்டமாக தினசரி கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.