முகப்பு
இந்தியா

சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும்: அமைச்சா் சா.மு.நாசா்

முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 செப்டம்பர் 2022, 12:44 pm IST
பகிர்:

முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்துள்ளார்.

ஆவடி, வீராபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ்- பாக்யா. இவா்களது மகள் டானியா (9). முகச்சிதைவு நோயால் கடந்த 6 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தாா். சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசு உதவிட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். 

இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்பேரில், கடந்த 17-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், மருத்துவக் குழுவினா் டானியாவின் வீட்டுக்குச் சென்று இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனா். பின்னா், சிறுமியை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். 

Advertisement

Advertisement

அங்கு டானியாவுக்கு 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது
அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து சிறுமியை வாழ்த்தினர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சா் சா.மு.நாசா், சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும். சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவானது. அதை முழுவதுமாக அரசே ஏற்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments