வேலூரில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இதில், மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட 48 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 3,469 மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.
தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
Advertisement
Advertisement
வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட காந்தி நகர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதேபோல், அல்லாபுரத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட 48 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 3,469 மாணவ, மாணவிகளுக்கு இந்த காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.