சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வா்நாத் பண்டாரி செப்டம்பர் 12ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார்.
இந்நிலையில், நீதிபதி துரைசாமி நாளை மறுநாளுடன்(செப்.21) ஓய்வுபெறும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த நீதிபதியான இவர், செப். 22ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.