முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 23 செப்டம்பர் 2022, 10:38 am IST
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது. 

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதும் அடுத்து சில நாள்களில் குறைக்கப்பட்ட விலையைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகரிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது. 

Advertisement

Advertisement

செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.37,520-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ரூ.4,690-க்கு விற்பனையாகி வருகிறது. 

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, ரூ.63.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ 63,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதனிடையே, பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை 30 காசுகள் குறைந்து 81.18 ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், தங்கம்,  வெள்ளியின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments