FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாஜக பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய கே.டி.ராகவன்!

காஞ்சிபுரம் தொகுதி பாஜக அமைப்பாளர் கே.டி.ராகவன் தலைமையில் மக்களவை தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 டிசம்பர் 2023, 12:43 pm IST
கே.டி.ராகவன்
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொகுதி பாஜக அமைப்பாளர் கே.டி.ராகவன் தலைமையில் மக்களவை தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மக்களவை தேர்தல் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் முனைப்பில் பாஜக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

பாஜக சார்பில் அனைத்து தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளரும், மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில்குமார் தலைமையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் கே.டி.ராகவன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை பொறுப்பாளர்களுக்கு வழங்கினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாவட்ட பொது செயலாளர் வாசன், மாவட்ட துணை தலைவர் கூரம் விஸ்வநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் மண்டல தலைவர்கள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments