முகப்பு
தமிழ்நாடு

சாம்பல் புதன்: புதுச்சேரியில் 40 நாள்கள் தவக்காலம் தொடங்கியது!

கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் நாளையொட்டி புதுச்சேரியில் 40 நாள்கள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 22 பிப்ரவரி 2023, 8:40 am IST
பகிர்:

கிறிஸ்துவர்களின் சாம்பல் புதன் நாளையொட்டி புதுச்சேரியில் 40 நாள்கள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

இயேசு சிலுவையில் அரையப்படுவதற்கு முன்பு 40 நாள்கள் தவம் இருந்தார். அவ்வாறு இயேசு தவக்காலம் தொடங்கியதை சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சாம்பல் புதன் புதன்கிழமை(பிப்.22) தொடங்கியது. 

இதனையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ரயில் நிலையம் எதிரில் உள்ள பிரெஞ்சு காலத்து இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பங்கு தந்தை குழந்தைசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது. 

Advertisement

Advertisement

தவக்காலம் இன்று தொடங்கி, 40 நாள்களுக்கு கிறிஸ்துவர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நாள்களை இறை ஆர்வலர்கள், புனித நாள்களாக கருதுவர். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

இந்நிலையில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளாக புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 6 ஆம் தேதி புனித வியாழன் அனுஷ்டிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 7 அன்று இயேசு சிலுவையில் அறையும் நாளான புனிதவெள்ளி வருகிறது. அன்றிலிருந்து 3 ஆவது நாளில் வரும் இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை ஏப்.9 ஆம் தேதி கிறிஸ்துவர்கள் கொண்டாட உள்ளனர்.

இதேபோல் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள மிகவும் பழைமையான தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, புனித அந்தோணியார், அரியாங்குப்பம் மாதா கோயில் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments