முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே  நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச்  26-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், தமிழத்தில் அதற்கான அவசியம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முன்கூட்டியே  நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரசான இந்த வைரஸ் ஹெச்3என்2 என அழைக்கப்படுகிறது.

இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது.

வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச் 16 முதல் 26-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →