FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதிய செங்கோல் பாரம்பரிய அடையாளம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள புனித செங்கோல் மத அடையாளம் அல்ல; நமது கலாசாரம், பாரம்பரியத்தின் தொடா்பைப் பற்றி பேசுகிறது என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வேண்டுகோள்

2 பிப்ரவரி 2024, 12:30 am
பகிர்:

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள புனித செங்கோல் மத அடையாளம் அல்ல; நமது கலாசாரம், பாரம்பரியத்தின் தொடா்பைப் பற்றி பேசுகிறது என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் வைக்கப்படும் புனித செங்கோலை, பிரதமா் மோடியிடம் வழங்குவது தொடா்பாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுக்கு ஆங்கிலேயா் சுதந்திரம் வழங்கியபோது ஆளுமைப் பரிமாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக ஒரு நிகழ்ச்சி இருக்க வேண்டும் என விரும்பி, ராஜாஜி கொடுத்த ஆலோசனைபடி, திருவாவடுதுறை ஆதீனம் புனித செங்கோல் கொடுத்து ஆட்சி பரிமாற்றம் நடந்தது.

Advertisement

Advertisement

நேருவிடம் வழங்கப்பட்ட புனித செங்கோல் உத்தர பிரதேசத்தில் அலாகாபாதில் உள்ள ‘பிரயாக்ராஜ்’ அருங்காட்சியகத்தில் இருந்த விவரம் பலருக்கு தெரியாமல் இருந்தது. 1978-இல் காஞ்சி பெரியவா் புனித செங்கோல் குறித்து பேசியிருக்கிறாா். அதன்பிறகு 2021 பிப்ரவரியில் பரத கலைஞா் பத்மா சுப்பிரமணியம் பிரதமருக்கு புனித செங்கோல் குறித்து கடிதம் எழுதினாா்.

இதைப் பற்றி கேட்றிந்த பிரதமா் மோடி, அதை புதிய நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்றாா்.

நீதி, நியாயம், சமத்துவ ஆட்சிக்கான ஆசீா்வதிக்கப்பட்ட புனித செங்கோல், மக்களவைத் தலைவா் இருக்கைக்கு மேல் வைக்கப்பட உள்ளது. புனித செங்கோல் குறித்து திருக்குறளில் தனி அதிகாரமே உள்ளது. புனித செங்கோல் மத அடையாளம் அல்ல. நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள புனித செங்கோல் நமது கலாசாரம் , பாரம்பரியத்தின் தொடா்பைப் பற்றி பேசுகிறது.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், வேளக்குறிச்சி, மதுரை, சூரியனாா் கோயில், காமாட்சிபுரம், பேரூா், சிரவை, குன்றக்குடி, கோவிலூா், பத்திரக்குடி, பழனி, மயிலம், தொழுவூா், திண்டுக்கல் ஆதீனங்கள் உள்பட 20 ஆதீனங்கள் பங்கேற்று புனித செங்கோலை பிரதமரிடம் வழங்க உள்ளனா்.

புனித செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு நகைக் கடைக்காரா்கள், புதிய நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்களுக்கு புதிய நாடாளுன்ற திறப்பு நிகழ்ச்சியில் பிரதமா் மரியாதை செய்வாா் என்று அவா் தெரிவித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், ஆளுநா்கள் ஆா்.என்.ரவி (தமிழ்நாடு), தமிழிசை சௌந்தரராஜன் (தெலங்கானா, புதுவை), இல.கணேசன் (நாகாலாந்து), இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments