கோப்புப்படம் 
தமிழ்நாடு

அக். 5ல் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்!

சென்னையில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சென்னையில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று(அக். 3, செவ்வாய்க்கிழமை) காலை நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால், பாஜக தலைவர்களைச் சந்திக்க அண்ணாமலை தில்லி சென்றதால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) அண்ணாமலை தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை தில்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய நிலையில் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, சென்னை கமலாலயத்தில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் பாஜக பொறுப்பாளர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலியர்றளர் பொல்கி... மடோனா!

அழகிய லைலா... ரித்திகா நாயக்!

புன்னகை பட்டு... பிரக்யா நாக்ரா!

மல்லிகை மொட்டு... அனுபமா பரமேஸ்வரன்!

டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்குமா? என்ன செய்யப் போகிறார்? இன்னும் சில நாள்களே!

SCROLL FOR NEXT