முகப்பு
தமிழ்நாடு

லியோ டிரெய்லர்: விஜய் ரசிகர்களால் சூறையாடப்பட்ட திரையரங்கம்!

லியோ டிரெய்லர் திரையிடப்பட்ட திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில், திரையரங்கின் இருக்கைகள் சேதமடைந்தன. 

Updated On : 6 அக்டோபர் 2023, 3:12 pm IST
பகிர்:

லியோ டிரெய்லர் திரையிடப்பட்ட திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில், திரையரங்கின் இருக்கைகள் சேதமடைந்தன. 

கொண்டாட்டம் என்ற பெயரில் இருக்கைகளை உடைத்தும், கிழித்தெறிந்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (அக். 5) மாலை வெளியானது.

Advertisement

Advertisement

லியோ டிரெய்லர் வெளியான அரை மணிநேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. மிகக் குறுகிய கால இடைவெளியில் 5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று லியோ டிரெய்லர் டிரெண்டிங்கில் நீடித்து வருகிறது. 

இதனிடையே சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள திரையரங்கில் லியோ டிரெய்லர் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், தியேட்டர் இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் கோஷங்களை எழுப்பினர். ரசிகர்கள் என்ற பெயரில் வன்முறை களியாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தியேட்டர் முழுவதும் சேதமடைந்தது.

இது தொடர்பாக விடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  'லியோ' திரைப்படம் வருகிற 19-ம் தேதி வெளியாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments