FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக்! நடிகை தபு கதாபாத்திர அறிமுக விடியோ வெளியீடு!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஸ்லம் டாக் படத்தின் நடிகை தபு கதாபாத்திர அறிமுக விடியோ இன்று வெளியானது.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:44 pm IST
நடிகை தபு / விஜய் சேதுபதி
பகிர்:

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஸ்லம் டாக் படத்தின் நடிகை தபு கதாபாத்திர அறிமுக விடியோ இன்று வெளியானது.

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட்.

ஆக்‌ஷன் பாணி கதைக்களம் கொண்ட இப்படத்தில் தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகை தபு-வின் கதாபாத்திர அறிமுக விடியோ இன்று வெளியானது. கௌரி ஹெக்டே என்கிற காவல்துறை அதிகாரியாக மிரட்டலான ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

Vijay Sethupathi's 'Slumdog'! Character introduction video of actress Tabu released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments