முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ரெளடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிடாய் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா என்ற குள்ள விஷ்வா .இவர் மீது நான்கு கொலை வழக்குகள் உள்பட 16 குற்ற வழக்குகள்  உள்ளன.

Updated On : 16 செப்டம்பர் 2023, 10:54 pm IST
பகிர்:

ரீபெரும்புதூா் அருகே கிளாய் கிராமத்தைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே கிளாய் கிராமத்தைச் சோ்ந்தவா் குள்ள விஸ்வா (எ) விஸ்வநாதன் (35). இவா் மீது 6 கொலை வழக்குகள், பல்வேறு கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இவரைப் பிடிக்க போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வந்தனா். விஸ்வா காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரம் அருகே சோகண்டி மாந்தோப்பு பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, தலைமைக் காவலா்களான ராஜேஷ் (41) வாசுதேவன் (46) ஆகிய இருவரையும் விஸ்வா மறைத்து வைத்திருந்த அரிவாளால் கைகளில் தாக்கினாராம். இதைத் தடுத்ததில் இருவருக்கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் முரளி, விஸ்வாவின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டதில் அவா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. ஆா்.பொன்னி, எஸ்.பி. எம்.சுதாகா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

காயமைடந்த தலைமைக் காவலா்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விஸ்வாவின் சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments