கொடநாடு விவகாரம்: இபிஎஸ்ஸை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரா் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரா் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநா் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மறைத்ததாகக் கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினா் ரமேஷ் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர்.
இதற்கிடையே கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும், மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தனபால் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடா்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க கோரியும், மான நஷ்டஈடாக ரூ.1 கோடியே 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொடநாடு வழக்கில் இபிஎஸ்ஸை தொடர்புபடுத்தி பேசுவதற்கு தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து, இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க தனபாலுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.