விமான நிலைய மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!
சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
படிக்க | மெட்ரோ ரயில் - பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு!
Advertisement
Advertisement
சின்னமலை முதல் ஆலந்தூர் வரையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக விம்கோ நகர் முதல் சின்னமலை வரையில் நீல நிற (ஒற்றை வழித்தடம்) வழித்தடத்தில் மெட்ரோ இயக்கப்படுகிறது. ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரையில் லூப் லைனில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதாவது, விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் சென்று, ரயில் மாறி விமான நிலையம் செல்ல வேண்டும்.
பயணிகள் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.