கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி
கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற மற்ற 3 மாணவிகளும் ஆற்றில் மூழ்கினர்.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து 4 பேரையும் தீவிரமாகத் தேடிய நிலையில் 4 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இவர்கள் நால்வரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.