ஓடிடியில் ஜன நாயகன் எப்போது?
ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23 உலகெங்கும் 3000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.
மேலும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டன.
ஜன நாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதால், குழந்தைகள் கூட்டம் பெரிதாக வரவில்லை. எனினும், , இப்படம் உலகளவில் ரூ. 280 கோடிக்கும் அதிகமாகவும் தமிழகத்தில் ரூ. 120 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Information regarding the OTT release of Vijay's film Jananayagan has come to light.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.