நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை!
திருநெல்வேலி மாவட்டம், கரிக்கா தோப்பு எம்.கே.பி. நகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் தீன். இவர் எம். சாண்ட் விற்பனை செய்து வருகிறார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கரிக்கா தோப்பு எம்.கே.பி. நகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் தீன். இவர் எம். சாண்ட் விற்பனை செய்து வருகிறார். இவர் வீட்டில் புதன்கிழமை காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கோவையில் கார் வெடிப்பு வழக்கின் பின்னணியில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!
கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நிதி உதவி வாங்கி கொடுத்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வங்கிகளில் பண பரிவர்த்தனை தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.