அண்ணாமலை இன்று தில்லி பயணம்: அமித் ஷாவுடன் சந்திப்பு?
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபு கொலையைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுடன் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.
தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த அண்ணாமலை மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் புகார் மனுவை அளித்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இன்று தில்லி செல்லும் அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பிரபு கொலை மற்றும் தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடர்பாக புகார் அளிக்க திட்டமிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.