முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.48 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை ஒரு சவரன் ரூ.41,888 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 12 ஜனவரி 2023, 11:02 am IST
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை ஒரு சவரன் ரூ.41,888 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

டிச.31 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை (ஜன.12) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,236 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,888 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி புதன்கிழமை விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.