ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் உயிரிழப்பை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இடைத்தோ்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளா் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளா் தோ்வு நடைபெற்று வருகிறது.
தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. தேமுதிக வேட்பாளராக மாநகா் மாவட்ட செயலாளா் எஸ்.ஆனந்த் (43) அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.