ஜெ.பி.நட்டா இன்று கிருஷ்ணகிரி வருகை!
கிருஷ்ணகிரியில் நடைபெறும் பாஜக நிகழ்வுகளில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பங்கேற்கவுள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடைபெறும் பாஜக நிகழ்வுகளில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பங்கேற்கவுள்ளார்.
குந்தாரப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் வருகை தரும் ஜெ.பி. நட்டா, பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வரவுள்ளார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் இருந்து காணொலி மூலம் தருமபுரி, நாமக்கல் உள்பட 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கவுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | இன்று எம்எல்ஏவாக பதவியேற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வை முடித்துவிட்டு மீண்டும் பெங்களூரு செல்லும் நட்டா, கர்நாடக தேர்தல் குறித்து அம்மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு தில்லி திரும்புகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.