குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி!
குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது.
குற்றாலம் மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர்வரத்து சற்று அதிகரித்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இந்து மதத்திற்கு எதிராகப் பேசவில்லை: அமைச்சர் உதயநிதி
இந்த நிலையில், நீா்வரத்து சற்று தணிந்ததால் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.