தங்கம் விலை மீண்டும் குறைந்தது: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5390-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த 25 ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.1048 வரை குறைந்துள்ளது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 610 ஆக உயர்வு!
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,410
1 சவரன் தங்கம்............................... 43,120
1 கிராம் வெள்ளி............................. 77.50
1 கிலோ வெள்ளி.............................77,500
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.