விஜய் ஆண்டனி ஏன் காலணி அணிவதில்லை? உருக்கமான காரணம் சொன்ன மனைவி!
அப்பா குட்டி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி பேசியது குறித்து...
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஏன் காலணி அணிவதில்லை என்று அவரின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி மனம் திறந்து கூறியுள்ளார்.
அப்பாக்குட்டி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இது தொடர்பாக பேசியதாவது:
Advertisement
Advertisement
எங்கள் மகள் மீரா பயன்படுத்த உலகம் முழுக்க இருந்து காலணிகள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அவள் மறைவுக்குப் பிறகு அவை வீட்டில் அப்படியே இருக்கின்றன.
அதையெல்லாம் பார்த்த பிறகு தான் இனி வாழ்நாளில் தான் காலணி அணிவதில்லை என முடிவெடுத்து விஜய் ஆண்டனி காலணி அணிவதில்லை. மீராவின் நினைவாக அவளது கைக்கடிகாரத்தையே இன்று வரை அவர் அணிகிறார் என்று உருக்கமாகக் கூறினார்.
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.
இப்படம் அக். 16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜெயிலர் படத்தின் வெளியீட்டால் தள்ளி வைக்கப்பட்டது. நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.