முகப்பு
தமிழ்நாடு

அமித் ஷாவின் புதுக்கோட்டை பயணம் ரத்து

மழை காரணமாக அமித் ஷாவின் புதுக்கோட்டை பயணம் ரத்து

Updated On : 12 ஏப்ரல், 2024 at 12:21 PM
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்:

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று மதுரை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுக்கோட்டை பயணம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.

காரைக்குடி, தென்காசி மற்றும் மதுரையில் வாகனப் பேரணி நடத்துவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னதாக, சிவகங்கை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் அமித் ஷா பிரசாரம் செய்யவிருந்த வாகனப் பேரணியும் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று மழை காரணமாக புதுக்கோட்டை பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்கோட்டை, திருமயம் கோயிலுக்குச் செல்லும் அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், மதுரையில் பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →