FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்

டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 13 ஆகஸ்ட் 2024, 4:46 pm IST
டிஎன்பிஎஸ்சி 
பகிர்:

தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகித்து வரும் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எஸ்.கே. பிரபாகரை, டிஎன்பிஎஸ்சியின் தலைவராக நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி-யின் தலைவராக எஸ்.கே. பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரச பின்பற்றவில்லை என்று கோப்புகளை திருப்பி அனுப்பியது. இதையடுத்து, உரிய கோப்புகளுடன் தமிழக அரசு மீண்டும் பரிந்துரையை அனுப்பியது. ஆனாலும், அந்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் முன் வராமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தமிழக உள்துறை செயலாளராக எஸ்கே பிரபாகர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே. பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி-க்கு, புதிதாக 9 உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments