முகப்பு
தமிழ்நாடு

ஆளுநருடன் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் திடீர் சந்திப்பு!

ஆளுநருடன் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு பற்றி...

Updated On : 29 ஜூன் 2026, 11:52 am IST
ஜே.சி.டி. பிரபாகர் - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு இன்று காலை வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அவரின் ராஜிநாமா கடிதத்தை ஏற்பதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரும் அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து ஜே.சி.டி. பிரபாகர் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரும் சென்றுள்ளார்.

ஆளுநர் உரைக்கு முறைப்படி நன்றி தெரிவிப்பதற்காகவும், தவெக அரசின் மீதான குதிரை பேரம் புகார் குறித்து விளக்கம் அளிக்கவும் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோருக்கு எதிராக கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்திருந்த நிலையில், அவர்களின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றது தொடர்பாக எழுந்த புகாருக்கும் பேரவைத் தலைவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுவரை அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Assembly Speaker J.C.D. Prabhakar holds a meeting with the TN Governor!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments