FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்

ஜன நாயகன் படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கருத்து...

பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்
பகிர்:

ஜன நாயகன் படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"முதல்வர் விஜய் நடித்த 'ஜன நாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகியுள்ளது. ஜன நாயகன் படத்திற்கும் மாணவர்களின் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜன நாயகன் திரைப்படம் இளைஞர்களை மழுங்கடிக்கவில்லை.

Advertisement

Advertisement

ஜன நாயகன் படத்தைப் பார்ப்பதன் மூலமாக மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர மாணவர்களை மூளைச் சலவை செய்யும் படமல்ல.

நம்மை பொறுத்தவரை வார்த்தைகளின் மூலமாக, நாம் செல்லும் பாதையை திசைதிருப்பும் முயற்சியில் யாரும் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்" என்றார்.

வியக்க வேண்டிய படம்

ஏற்கெனவே பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் முதல்வர் விஜய் நடித்த 'ஜன நாயகன்' திரைப்படத்தைப் பார்த்தார்.

அதன்பின்னர் படம் பற்றி செய்தியாளர்களுடன் பேசும்போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் பல தடைகளைக் கடந்து வெளியானபோது அதன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி கிடைத்ததோ, அதேபோன்ற ஒரு உணர்வும், மகிழ்ச்சியும் தற்போது இந்தப் படத்தைப் பார்த்தபோது கிடைத்ததாகக் கூறினார். உலகமெங்கும் வாழும் இந்தியர்கள், தமிழர்கள், சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்த்து வியக்க வேண்டிய ஒரு படம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், பர்வேஸ், சம்பத்குமார் உள்ளிட்டோர் நேற்று ஜன நாயகன் திரைப்படம் பார்த்து கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.

TN speaker JCD prabhakar speaks about CM vijays jananayagan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments