முகப்பு
தமிழ்நாடு

சிலருக்கு எப்போதும் விடியல் ஏற்படாது: மு.க. ஸ்டாலின்

அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் இழிவான அரசியல் செய்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

Updated On : 4 டிசம்பர் 2024, 6:45 pm IST
மு.க. ஸ்டாலின் - DIPR
பகிர்:

அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் இழிவான அரசியல் செய்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

ஃபென்ஜால் புயல் தமிழகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்ட இரண்டாம் கட்ட புதிய திட்டப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 4) தொடக்கி வைத்தார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

''ஃபென்ஜால் புயல் தமிழகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.

கடந்தகால ஆட்சியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. திமுக ஆட்சியில் மழை வெள்ளத்தில் இருந்து அடுத்த நாளே சென்னை மீண்டுள்ளது.

தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது.

நிவாரணப் பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியது கடந்தகால ஆட்சியில்தான்.

சிலருக்கு விடியல் ஏற்படாது

நான் மேயராக இருந்தபோது சென்னைக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தேன்.

மக்களுக்கான நிவாரணப் பணிகளை திமுக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.

சிலரின் விடியா முகங்களுக்கு எப்போதும் விடியல் ஏற்படாது. திமுகவுக்கு கிடைக்கும் பாராட்டுகளால் எதிர்க்கட்சிக்கு வயிறு எரிகிறது. பொதுமக்கள் கூறும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதனை சரி செய்வோம்

ஆரம்ப காலத்தில் சென்னை என்று சொன்னாலே அது வடசென்னைதான். வடசென்னைக்கு ரூ. 6000 கோடிக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் விருப்பங்களை வைத்து திட்டங்களைத் தீட்டி வருகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.