முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்தும் குறைந்தது!

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்தும் குறைந்தது!

Updated On : 7 டிசம்பர், 2024 at 2:56 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,601 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்திருப்பதால் நீர்வரத்துக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 14,404 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,601 கன அடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும் கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 115.32 அடியிலிருந்து 115.78 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 86.69 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →