FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேட்டூர் அணை: இன்றைய (நவ. 7) நிலவரம்!

மேட்டூர் அணையின் இன்றைய (நவ. 7) நிலவரம் பற்றி...

11 வினாடிகள் முன்பு
மேட்டூர் அணை நீர்வரத்து - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (நவ. 7) காலை வினாடிக்கு 10,864 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,872 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில், சனிக்கிழமை காலை 10,864 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 58.18 அடியிலிருந்து 58.95 அடியாக உயர்ந்துள்ளது நீர் இருப்பு 23.91 டி.எம்.சி.யாக உள்ளது.

Advertisement

Advertisement

Mettur Dam: Status as of today (Nov. 7)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.