முகப்பு
தமிழ்நாடு

பாமக பிரமுகரைக் கொல்ல முயன்ற கும்பல் சிக்கினர்!

முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சித்ததாக வாக்குமூலம்

Updated On : 7 ஜூலை 2024, 12:50 pm IST
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் பாமக பிரமுகரான சிவசங்கரை கொலை செய்ய முயன்ற கும்பலை, திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா், எஸ்.என்.சாவடி பகுதியைச் சோ்ந்த பாமக பிரமுகரான சிவசங்கரை, சனிக்கிழமை பிற்பகல் தனது வீட்டின் முன் 4 போ் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில், பலத்த காயமடைந்த சிவசங்கர், சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்கபாண்டியன், சதீஷ், வெங்கடேசன் ஆகிய மூவரும், கடந்தாண்டு சிவசங்கா் தம்பி பிரபுவை கொலை செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவத்தின் வழக்கு கடலூா் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் தான், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகவும், வழக்கை முன்னின்று நடத்துபவருமான சிவசங்கரை வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.