FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கரப்பான்பூச்சிகளால் ஸ்தம்பிக்கும் தில்லி... இன்றைய நேரலை (ஜூலை 22)

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 22 ஜூலை 2026, 5:36 pm IST
தில்லி போராட்டத்தில்... - படம்: ஏபி.
பகிர்:
Updated On : 22 ஜூலை 2026, 5:36 pm IST

சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!

summary

தில்லியில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ‘வீ தி லீடர்ஸ்’ (இது நம்ம இயக்கம்) அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

Updated On : 22 ஜூலை 2026, 5:34 pm IST

ஹைப்ரிட் வகை காரில் அதிக மைலேஜ் கொடுக்கும் அர்பன் க்ரூசர் ஹைரைடர்!

டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் காராணது ஹைப்ரிட் வகை காரில் அதிகபட்சமாக 28 கி.மீ. மைலேஜ் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 5:34 pm IST

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 4:28 pm IST

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்

Updated On : 22 ஜூலை 2026, 2:20 pm IST
summary

தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பதவி விலக வேண்டுமென்று, பிரதமர் இல்லத்தின் முன்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர்கள் பிரியங்கா, கே.சி. வேணுகோபால், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் தர்னாவில் ஈடுபட்டனர்.

பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் ராகுல், பிரியங்கா, அகிலேஷ் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின் அவர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்றும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Updated On : 22 ஜூலை 2026, 2:05 pm IST

தமிழகத்தில் போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏன்? ராஜ்மோகன்

Updated On : 22 ஜூலை 2026, 2:05 pm IST

போராட்டக்களமாகும் தமிழகம்!

நீட் தேர்வுக்கு எதிராகவும் தில்லி இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது....

Updated On : 22 ஜூலை 2026, 2:03 pm IST

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்

தில்லியில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. - முதல்வர் விஜய்.

Updated On : 22 ஜூலை 2026, 1:27 pm IST

சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு!

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்து பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 12:38 pm IST

நேரத்தை வீணாக்காதீர்கள்!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டதில் காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

Updated On : 22 ஜூலை 2026, 12:12 pm IST

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

தில்லி கரப்பான் பூச்சி ஜனதா (சிஜேபி) கட்சியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 11:42 am IST

எதிர்க்கட்சிகள் போராட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், அந்தப் போராட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 11:41 am IST

10 எஃப்ஐஆர்-கள் பதிவு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தொடர்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் 10 எஃப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 22 ஜூலை 2026, 11:05 am IST

கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ராகுல், காங்கிரஸ் எம்.பி.க்கள்!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு உடையணிந்து நாடாளுமன்றம் வந்தனர்.

Updated On : 22 ஜூலை 2026, 11:04 am IST

ஜூலை 20 போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி 

தில்லியில் ஜூலை 20-ஆம் தேதி நடந்த போராட்டம் ஒரு டிரைலர்தான் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார்.

Updated On : 22 ஜூலை 2026, 10:43 am IST

சிஜேபி போராட்டத்தால் தில்லியில் பதற்றம்!

Updated On : 22 ஜூலை 2026, 10:13 am IST

நீட் தேர்வு ரத்தே நிரந்த தீர்வு: மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 ஜூலை 2026, 10:12 am IST

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: தவெக

தலைநகர் தில்லியில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தவெக தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஜூலை 2026, 10:12 am IST

இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வு, வினாத் தாள் கசிவு உள்பட அனைத்து விவகாரங்களிலும் இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments