FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் நாங்கள் தொடர்பில் இல்லை! சிஜேபி

தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் நாங்கள் தொடர்பில் இல்லை என்று சிஜேபி செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளது பற்றி...

Updated On : 22 ஜூலை 2026, 4:07 pm IST
ராகுல் காந்தி, அபிஜீத் தீப்கே - படம் - தினமணி
பகிர்:

தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் நாங்கள் தொடர்பில் இல்லை என்று சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் புதன்கிழமை (ஜூலை 22) தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராடி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை தில்லி காவல்துறை கைது செய்தது.

இதுகுறித்து சௌரவ் தாஸ் பேசியதாவது:

அரசாங்கத்துக்கு நாங்கள் இரண்டு வாய்ப்புகளை வழங்கினோம். அவை, அவர்கள் ஜந்தர் மந்தருக்கு வருவது அல்லது ஜந்தர் மந்தருக்கு அருகில் பொதுவான இடத்தில் நாங்கள் சந்திப்பது. ஜூலை 20 ஆம் தேதி அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் பொய்யான கதைகளைப் பரப்பினார்கள்.

காலையிலிருந்து அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறார்கள். அந்தத் தகவலை காவல்துறையே எங்களிடம் கூறிய விடியோ காட்சிகள் உள்ளன. அரசிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாங்கள் தயார். ஆனால் அரசு வெளிப்படைத் தன்மையுடன் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது முடிவு பெறும்.

ராகுல் காந்தியுடன் நாங்கள் தனிப்பட்ட தொடர்பில் இல்லை. ஆனாலும் அவரின் அமைதிவழிப் போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ராகுல் காந்திக்கும், எம்.பி.க்களுக்கும் எதிரான காவல்துறையின் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்று சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

summary

CJP spokesperson Saurav Das stated on Wednesday (July 22) that they are not in personal contact with Rahul Gandhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments