FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தொடரும் எதிர்ப்பு... கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ராகுல், காங்கிரஸ் எம்.பி.க்கள்!

கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ராகுல், காங்கிரஸ் எம்.பி.க்களைப் பற்றி...

Updated On : 22 ஜூலை 2026, 10:54 am IST
கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ராகுல், காங்கிரஸ் எம்.பி.க்கள்!
பகிர்:

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு உடையணிந்து நாடாளுமன்றம் வந்தனர்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பதவி விலக வேண்டுமென்று, பிரதமர் இல்லத்தின் முன்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர்கள் பிரியங்கா, கே.சி. வேணுகோபால், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் தர்னாவில் ஈடுபட்டனர்.

பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர். இதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு உடையணிந்து நாடாளுமன்றம் வந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மேலும், அவர்கள் நாடாளுமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

summary

Leader of the Opposition Rahul Gandhi and Congress MPs wore black attire to protest in Parliament over the alleged NEET-UG paper leak and demand government accountability.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments