FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

நாளை தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பற்றி....

9 அக்டோபர் 2026, 4:34 pm IST
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி | முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

நாளை தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யை சந்திப்பார் எனத் தகவல் தெரிய வந்துள்ளது.

மதிய உணவின்போது சென்னையில் முதல்வர் விஜய்யை, ராகுல் காந்தி சந்தித்துப் பேசுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை (அக்.10) சென்னை வருகிறாா். தீவுத் திடலில் அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

‘மாணவா்கள் குரல்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மாணவா்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறாா் ராகுல் காந்தி. அந்த வகையில், சென்னை தீவுத் திடலில் சனிக்கிழமை நடைபெறும் மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளாா்.

Advertisement

Advertisement

கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் வகையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்துள்ளது. முன்னதாக சனிக்கிழமை காலை விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த நிா்வாகிகளிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறாா்.

summary

Information has come to light that Lok Sabha Opposition Leader Rahul Gandhi, who is coming to Tamil Nadu tomorrow, will meet Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments