ஜெ.பி. நட்டாவிடம் சிஜேபி வைத்த 3 நிபந்தனைகள் என்னென்ன?
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் அரசிடம் வைத்த மூன்று நிபந்தனைகள் பற்றி...
மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டாவிடம் மூன்று நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கடந்த ஜூன் 20 ஆம் தேதி கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் தொடங்கிய போராட்டம் இன்று தீவிரமடைந்துள்ளது.
முன்னதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, போராட்ட களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் இன்று தடியடி நடத்தினர். மேலும், நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.
இதனிடையே, சிஜேபி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் நிர்வாகி அஷுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்தனர்.
இது குறித்து, அஷுதோஷ் ரங்கா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
எங்களது பின்வரும் கோரிக்கைகள் தொடர்பாக ஜெ.பி. நட்டா தனது தலைமையுடன் கோரிக்கைகளை எடுத்துரைக்க கால அவகாசம் கோரியுள்ளார்.
1. சோனம் வாங்சுக் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
2. தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.
3. தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வர்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Ashutosh Ranga, spokesperson for the Karappanpoochi Makkal Katchi (CJP), has stated that three conditions have been placed before Union Health Minister J.P. Nadda.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.