கரப்பான்பூச்சிகளுடன் மோதாதீர்கள்! மற்ற நிபந்தனைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்!
மற்ற நிபந்தனைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என சிஜேபி தெரிவித்துள்ளது பற்றி...
மற்ற நிபந்தனைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என சிஜேபி தெரிவித்துள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.
போராட்டக் களமான ஜந்தர் மந்தரிலிருந்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதில் இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காவல்துறையின் செயலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இதுதான் ஜனநாயகம். தர்மேந்திர பிரதான் பதவி விலகிவிட்டார். எங்களிடம் மேலும் இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இதோடு எங்களால் செல்ல முடியாது.
முதலாவதாக, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 1 கோடியை அவர்கள் பெற்றாக வேண்டும்.
இரண்டாவதாக, ஜூலை 20 அன்று வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், கரப்பான்பூச்சிகளுடன் மோதாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
CJP has stated that the protest will continue until the other conditions are met.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.