FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?

பள்ளியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சி கெடு விதித்திருப்பது பற்றி..

ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் சத்தர்பூரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படம் என முதல்வர் ரேகா குப்தா அளித்த வாக்குறுதிகள் செப். 15-க்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி கெடு நிர்ணயித்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பு, சத்தர்பூரின் சஞ்சய் காலனியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற முதல்வர் ரேகா குப்தா, உடனடியாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இன்னமும் அவை எதுவும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் சௌரவ்தாஸ், அவற்றை செப். 15க்குள் நிறைவேற்ற வேண்டும் என காலக் கெடு நிர்ணயித்துள்ளார்.

அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பள்ளிக்கு வரும் மாணவர்களை அங்குள்ள குப்பைகள்தான் வரவேற்கின்றன. அந்த இடத்தில் நின்றுதான் கடந்த பிப்ரவரியில் தில்லி முதல்வர் பேசியிருந்தார். அனைத்தும் சரி செய்து தரப்படும் என்று.

Advertisement

Advertisement

மழலையர் பள்ளிகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கொண்ட தரமான பள்ளிகள் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளிகளைப் பாருங்கள் என்று சமூக ஆய்வை நடத்தி வரும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் இப்பள்ளி ஆய்வு நடத்தப்பட்டு, அங்குள்ள நிலைமையை விடியோ எடுத்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

தரமற்ற மதிய உணவு, மோசமான கழிப்பறை வசதி போன்றவைதான் இன்னமும் பள்ளிகளின் நிலையாக உள்ளது.

இப்படிப்பட்ட பள்ளிகளுக்கு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அதிகாரிகளும் தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்களா என்று கேள்வி எழுப்பியிருக்கும் சௌரவ், முதல்வர் வந்து நேரடியாக ஆய்வு செய்து சென்ற பிறகும், இந்தப் பள்ளி இப்படியே இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments