கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!
தில்லி போராட்டக் களத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் மீது மை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து...
ஜந்தா் மந்தா் போராட்டக் களத்தில் இருந்து சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமை மதியம் ஜந்தா் மந்தரில் மற்றொரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது.
’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் டிப்கே ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பெண் ஒருவா் அவா் மீது நீல நிற மையை வீசினாா். ஆதரவாளா்கள் மேடையை நோக்கி விரைந்ததால் ஏற்பட்ட கூச்சலால், அந்த நிகழ்ச்சி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தீப்கே கூறுகையில், , ‘நீலம் எனது நிறம், ஜெய் பீம்‘ என்றாா். மேலும், தனது ஆதரவாளா்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதற்காக அவா் சற்றும் கலங்கவில்லை.
Advertisement
Advertisement
மையை வீசிய பெண் பா்கா த்ரெஹான் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டாா். அந்தப் பெண், தீப்கே உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி நடந்து சென்று, அவா் மீது நீல மையை வீசினாா். இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது. பின்னா் தன்னாா்வலா்களும் ஆதரவாளா்களும் அவரைக் கட்டுப்படுத்தினா்.
காவல்துறையினா் த்ரெஹானை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனா். அவா் அழைத்துச் செல்லப்பட்டபோது, தான் தாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, மத ரீதியான கோஷங்களை எழுப்பினாா்.
த்ரெஹான், தனது எக்ஸ் தளத்தில் தன்னை ஒரு ஆண்கள் உரிமை ஆா்வலா் மற்றும் ‘புருஷ் ஆயோக்‘ அமைப்பின் தலைவா் என்றும் கூறியுள்ளாா்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் உடனடியாகத் தெரியாத நிலையில், அவா் வெள்ளிக்கிழமை அன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் சிஜேபி-யின் ஆண் தலைவா்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தாா்.
அந்தப் பெண்ணின் அடையாளம் மற்றும் இச்செயலுக்கான நோக்கம் ஆகியவை உடனடியாகத் தெரியவரவில்லை. இருப்பினும், அவா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையின் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினா் கூறினா்.
இச்சம்பவத்திற்குப் பிறகு தீப்கே தனது ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட காணொளிச் செய்தியில், வாங்சுக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் ’சிஜேபி’ தனது போராட்டத்தைத் தொடரும் என்று தெரிவித்தாா்.
‘இரவிலோ அல்லது அதிகாலையிலோ எங்கள் போராட்டத்தை ஒடுக்கவும், இளைஞா்களின் குரலை முடக்கவும் தில்லி காவல்துறை திட்டமிட்டு வருகிறது. எனவே, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பேரணி செல்லும் வகையில், ஜந்தா் மந்தரில் நடைபெறும் இரவு நேர விழிப்புணா்வுப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்,’ என்று அவா் அதில் பதிவிட்டுள்ளாா்.
20 நாள்களாக நடைபெற்று வந்த காலவரையற்ற உண்ணாவிரதத்தின் போது சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, தில்லி காவல் துறையினா் அவரை சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றினா். சனிக்கிழமை அதிகாலையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது, சில போராட்டக்காரா்கள் காவல் துறையின் நடவடிக்கையைத் தடுக்க முயன்ால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
நீட் தோ்வில் நடைபெற்ாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக, ஜூன் 28 முதல் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தாா்.
A woman throws ink at CJP founder Abhijeet Dipke at Jantar Mantar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.