FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

14 ஜூலை 2024, 11:12 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூலை 15,16) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): சின்னக்கல்லாா் (கோவை)- 70, சின்கோனா (கோவை)- 60, வால்பாறை (கோவை), உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோவை) - தலா 50 மிமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 15, 16-ஆகிய தேதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளிலும், வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதிகளிலும், அரபி கடல், லட்சதீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளிலும் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments